சனாதன தர்மம் என்றால் என்ன? (Sanatana Dharma Meaning in Tamil)
இந்து சனாதன தர்மம் என்று எதுவும் இல்லை. அது வெறுமனே சனாதன தர்மம். சனாதனம் என்றால் மாறாதது. மாறாத ஒன்று எப்போதும் உண்மையானது. சனாதன தர்மம் என்பது வாழ்வின் மாறாத பரிமாணமாக, நமது இருப்பின் அல்லது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. அது புழுவாக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், அவை அனைத்தும், அதனதன் இருப்பை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளான சனாதன தர்மத்தால் ஆளப்படுகின்றன. இது சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான ஒற்றுமைக்காக, ஒருவருக்கொருவர் மனிதர்களால் விதிக்கப்பட்ட தண்டனைச் சட்டம் அல்ல. பரிவர்த்தனைச் சட்டங்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மாற வேண்டும். அது வேறொரு விஷயம். சனாதன தர்மம் ஒரு பரிவர்த்தனை தர்மம் அல்ல - இது ஒரு உயிரின் தர்மம். தர்மம் என்றால் என்ன? (Dharma Meaning in Tamil) "தர்மம்" என்ற வார்த்தையைப் புரிந்துகொள்வோம். தர்மம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். தர்மம் என்றால் மதம் அல்ல. இந்தக் கலாச்சாரத்தில், மதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை சிறந்த முறையில் நிகழ்வதற்கான அ...